
சென்னை: கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தொற்றுபரவாமல் தடுப்பதற்காக, சென்னைகாவல் ஆணையர் சங்கர்ஜிவால் சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலையங்களில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாரைக் கொண்டு சிறப்பு குழுக்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறை சிறப்பு குழுக்கள் மற்றும் காவல் குழுவினர் கடந்த 2 முதல் 4-ம் தேதி வரையிலான 3 நாட்கள் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது10,321 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20,64,200 வசூலிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்