Monday, January 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/25/large/760662.jpgகரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் ரத்து

சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜன.26-ம் தேதி (நாளை) குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய 4 நாட்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்து பேசுவர். மேலும், அந்தந்த கிராமத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள், அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு, அதன் பின் அதற்கான நிதி ஒதுக் கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...