Sunday, January 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/24/large/760345.jpgதஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: நீதிபதி முன்னிலையில் பெற்றோர் ரகசிய வாக்குமூலம்

தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது பெற்றோரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜராகிய மாணவியின் பெற்றோர், தனித்தனியாக இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளி அருகே தங்கியிருந்த அவர்,விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாக கூறி, அண்மையில் விஷம் குடித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றிகடந்த ஜன.19-ம் தேதி உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...