Friday, January 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/22/large/759689.jpgபொங்கல் தொகுப்பு குளறுபடி குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை: அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி

சென்னை: பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், குளறுபடிகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு, 2 கோடியே 15 லட்சத்து67,114 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18,946 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி மதிப்பில் கரும்பு மற்றும் பொங்கல்தொகுப்பு பை உட்பட 21 பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பொருட்கள் வாங்கப்பட்டன. கரும்பை பொறுத்தவரை விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஒரு கரும்பு ரூ.33 என்ற அடிப்படையில், 6 அடி உயரத்தில் சராசரிதடிமன் உள்ளதாக இருக்க வேண்டும். கரும்பை வெட்டிக் கொடுக்கக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...