Friday, February 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/19/large/769202.jpgசிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு; 648 நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று வாக்குப்பதிவு: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

சென்னை: தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலைபார்வையிட சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பிப்.19-ம் தேதி(இன்று) ஒரேகட்டமாக நடக்கும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்ததேர்தலுக்காக மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 218 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு57,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...