Wednesday, February 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/17/large/768415.jpgமத்திய அரசின் நிலுவை ரூ.25,714 கோடி; தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்: ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி நிலுவை, கரோனா நிவாரணம் ரூ.25,714 கோடியை மத்திய அரசு தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் பேசியிருப்பதாவது: திமுக அரசு அமைந்தால் என்னவெல்லாம் செய்கிறோம் என சொன்னோமோ, அதில் பெரும்பாலானவாக்குறுதிகளை இந்த 8 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. வாய்ப்புகளும் வளங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருக் கும் மக்களுக்கும் சரிசமமாக போய்ச் சேர வேண்டும். இதில் எந்த சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடும் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, அங்கு இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் போய்ச் சேருவதற்கு பதில், அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி.அதுதான் திராவிட சிந்தனை. நாங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...