Monday, March 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/08/large/774880.jpgராணிப்பேட்டை; 30 குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டிக்கொடுங்கள்: மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நரிக்குறவர்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர். கூட்டத்தில் மொத்தம் 238 மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், மேல்விஷாரம் சாதிக்பாட்ஷா நகரைச் சேர்ந்த பொதுமக்கள், ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் முறையிட்டனர். அவர்கள் அளித்த மனுவில், ‘‘தங்களது வீடுகள் நீர்பிடிப்பு பகுதி என்பதால் தங்களது வீடுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தங்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...