Monday, March 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/08/large/775060.jpgகோவையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் 28 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு

கோவையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின்கீழ் சுமார் 450 பெண்தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் வீடுகள்தோறும் சென்று 18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவை பரிசோதித்து வருகின்றனர். மேலும், வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் யாருக்கேனும் இருக்கிறதா என்பதையும், 30 வயதுக்கு மேற்பட்டபெண்களுக்கு மார்பக புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் கேட்டுதெரிந்துகொள்கின்றனர்.

நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அருகில்உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்கின்றனர். இதேபோல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடிபோதைக்கு அடிமையானவர்கள், காசநோய் பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைக்கு அனுப்பிவைக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...