Tuesday, March 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/16/large/778073.jpgமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி மற்றும் ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கிரிப்டோ கரன்ஸிகளில் ரூ.34 லட்சம் அளவுக்கு முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவாகவும் உள்ளார். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, பதவியை பயன்படுத்தி சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி, கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி ஊழல் செய்துள்ளதாக 7 பிரிவுகளின்கீழ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...