
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆண்டிற்கு ரூ.9 ஆயிரம் டன் மீன்கள் உற்பத்தி செய்யலாம் என மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாசன குளங்களில் ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பில் மிதவை கூண்டில் மீன் வளர்ப்பு திட்ட பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர். கே.எஸ்.பழனிசாமி, ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்