
சென்னை: உக்ரைனில் இருந்து இதுவரை 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 181 மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உக்ரைனில் இருந்து இதுவரை 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்து, வீடு செல்லும் வரை தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்