Thursday, March 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/18/large/778504.jpgகிடங்கில் பதுக்கிய 35 டன் ரேஷன் அரிசி, 2 டன் கோதுமை பறிமுதல்

வேலூர் அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 35 டன் ரேஷன் அரிசி, 2 டன் கோதுமையுடன் ஒரு லாரி மற்றும் 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் உட்பட 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பிரசாத் நகர் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட திட்டமிட்ட நுண்ணறிவு பிரிவு காவல் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் ராதாகிருஷ்ணன், சண்முகம், ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் அந்த கிடங்கில் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...