
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் 28-ம் தேதி இத்தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள சூழலில், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனால், இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு உருவாக்கப்பட்டது முதல், இதுவரையில் இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. கடந்த 2011ல் நடந்திருக்க வேண்டிய தேர்தல் 11 ஆண்டுகளாகியும் இதுவரை நடக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்