Monday, May 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/02/large/794766.jpgவிழுப்புரம் கூட்டுறவு சங்க விற்பனை பிரதிநிதிகளுக்கானத் தேர்வு: 2 மாதங்களில் முடிவுகளை வெளியிட உத்தரவு

சென்னை: காலிப் பணியிடங்கள் அதிகமாகி விட்டதைக் காரணம் காட்டி முழுமையாக முடிவடைந்த தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க விற்பனை பிரதிநிதிகளுக்கு 2020-ல் நடத்திய தேர்வு முடிவுகளை 2 மாதங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டுறவுத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க கடைகளில் 236 விற்பனை பிரதிநிதிகள் பணிக்கு மாவட்ட கூட்டுறவு சங்க தேர்வு குழு விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு நேர்முகத் தேர்வு நடத்திய நிலையில், அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து திவ்யா, தமிழ்மணி உள்ளிட்ட 8 பேர் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, தேர்வை ரத்து செய்துவிட்டதாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 8 பேரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...