Wednesday, May 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/19/large/801813.jpgராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை: தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 161-வது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், 142-வது சட்டப்பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தானு என்ற பெண், மனித வெடிகுண்டாக செயல்பட்டு படுகொலை செய்தார்.

இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தானு தனது பெல்ட்டில் கட்டியிருந்த வெடிகுண்டுக்கு, பேட்டரிகள் வாங்கி கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. எதற்காக பேட்டரி வாங்கி கொடுக்கிறோம் என தனக்கு தெரியாது என்ற பேரறிவாளனின் வாக்கு மூலம் நிராகரிக்கப்பட்டு, 19 வயதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...