
சென்னை: மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில், உண்மைகளை சரி பார்த்து கண்ணியம், ஒருமைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது தொடர்பாக அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மகரிஷி சரகர் உறுதி மொழி ஷரத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை பதிவிட்டு, இந்த உறுதி மொழியில் எது ஆட்சேபனைக்குரியது என்று யாரவது சொல்ல முடியுமா என்று கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்