
சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மே 26, 27-ம் தேதிகளில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல் - லிபரேஷன்) ஆகிய கட்சிகள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிலை கடந்த ஓராண்டில் மட்டும் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. காய்கறி, தானியங்கள், உணவு எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறைக்கு வழிவகுத்த மத்திய அரசின்கொள்கைகளால் தற்போது மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்