Monday, May 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/09/large/797772.jpg'ஆன்மிக பூமியான தமிழகத்தை திராவிட மாடல் அரசு வீணாக்கி வருகிறது' - எல்.முருகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஆன்மிக பூமியான தமிழகத்தை இந்த திராவிட மாடல் அரசு வீணாக்கி வருகிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் மீன்வளத்துறையின் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "இலங்கையில், நமது மீனவர்களின் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்தன. மீனவர்கள் எல்லை தாண்டிய பிரச்சினைகளிலும் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்டு வருகிறோம். விசைப்படகுகள் மீட்பது குறித்து, இரு நாட்டு இணைக் குழுக்கள் மூலம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுக்குள் சர்வதேச அளவிலான கப்பல்கள் வந்து எல்லை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு புதிய சட்டம் நிறைவேற்ற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...