
மதுரை: மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த எம்.செந்திலா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''என் கணவர் மோகனசுந்தரம் பெரியகருப்பன். மலேசியாவில் பாண்டி என்பவர் நடத்தி வரும் கார் சுத்தம் செய்யும் கம்பெனியில் பணிபுரிந்தார். என் கணவர் 25.5.2022-ல் என்னிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது ஊருக்கு திரும்ப இருப்பதாகவும், ஆனால் பாண்டி ஊருக்கு அனுப்ப மறுப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் என் கணவர் 26.5.2022-ல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்