Wednesday, June 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/09/large/811669.jpgதமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி - அரசு உத்தரவின் முழுவிவரம்

சென்னை: தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக கடைகள், நிறுவனங்களை திறந்து வைப்பதில் அந்தந்த பகுதியின் சூழலுக்கேற்ப நேரம் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்டம் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டது. அந்த சட்டப்படி, நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகள், உணவகங்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை மாநிலங்கள் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலங்களின் சூழல், நடைமுறை தேவைகள் அடிப்படையில் மாற்றியும் அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...