Friday, June 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/18/large/815378.jpgசசிகலாவை அதிமுகவில் சேர்க்க சொல்வது தேச விரோதமல்ல - ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எந்த கட்டத்திலும் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியதில்லை. இது தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்று தான் கூறி இருக்கிறேன்.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாம் என்பது தேச விரோத கருத்து இல்லை. சசிகலாவால்தான் இபிஎஸ் முதல்வராக்கப்பட்டார். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. 2017-ம் ஆண்டு சசிகலாவுடன் இபிஎஸ் இருந்தார். அதனால் அவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது அந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தேன். நாங்கள் வாக்களிப்பதால் அப்போது ஆட்சி கவிழும் சூழல் இல்லை. ஒரு தனிப்பட்ட ஆதிக்கத்தின் கீழ் கட்சியும், ஆட்சியும் செல்லக்கூடாது என்பதற்காக தர்மயுத்தம் நடத்தினோம். எங்கள் எதிர்ப்பை காட்டவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...