
கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மரில் மோதி எரிந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். எனினும், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூரில் இருந்து இன்று (ஜூலை 7) இரவு 7 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் விருத்தாச்சலம் புறப்பட்டு சென்றது. பேருந்து குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரிய காட்டு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் வந்த கடலூர் பச்சியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் சபரிநாதன் (30), அதே பகுதியைச் சேர்ந்த பக்கிரி சாமி மகன் செந்தில்குமார் (38) ஆகியோர் மீது பேருந்து மோதியது. சிறுதுநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மோதியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்