Thursday, July 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/07/large/823323.jpgசிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை - 20.07 அடிக்கு நீர்மட்டம் உயர்வு

கோவை: சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்றைய (ஜூலை 7-ம் தேதி) நிலவரப்படி அணையில் 20.07 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் 49.50 அடி வரை நீரைத் தேக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேரள அரசின் சார்பில், சிறுவாணி அணையில் 45 அடி அளவு வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. அதற்கு மேல் தண்ணீர் தேங்கினால் வனப்பகுதியில் உள்ள மதகுகள் வழியாகவும், கோவைக்கு குடிநீருக்காகவும் கூடுதலாக திறந்து விடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...