
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு (M.A,History) முதலாம் ஆண்டிற்கான இரண்டாம் பருவத்தேர்வில் ஆதிதிராவிடர் மக்களை மிகவும் இழிவுபடுத்தக்கூடிய வகையிலான ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பெரியார் பல்கலைக்கழக கேள்வித் தாளில் 'தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?' என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி ஆதிதிராவிடர் வகுப்பினரை சிறுமைப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக கண்டனம் எழுந்த நிலையில், எஸ்சி எஸ்டி மாநில ஆணையம் பெரியார் பல்கலைக்கழகம் மீது தானாக முன்வந்து புகார் மனு பதிவு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்