Saturday, July 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/17/large/827504.jpgநடப்பாண்டில் முதல்முறை: முழுகொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் முதல்முறையாக முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோரங்களில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனஅடி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் 116.67 அடியை எட்டியது. அப்போது, அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 17,349 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...