
சென்னை: சென்னையில் பல இடங்களில் நேற்று மாலையில் மிதமான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது இதுபோல, சென்னையில் பல இடங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
பகலில் ஓரளவு வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியத்துக்கு பிறகு, மேகக்கூட்டங்கள் திரண்டு, மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வேப்பேரி, எழும்பூர் உட்பட பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதுபோல, புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்