Tuesday, August 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/16/large/841178.jpgபுதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச மனை பட்டா - முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தாங்கி தியாகிகளுக்கு உலர் பழம் அடங்கிய தொகுப்பு, மிக்சி கிரைண்டர் வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: ‘‘தியாகிகள் போராடியதன் விளைவாக 75 ஆண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்ற பிறகு நாடும், மாநிலமும் எத்தகைய வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப்பார்ப்பது அவசியமான ஒன்று. இன்று உலகம் வியக்கின்ற அளவுக்கு நம்முடைய நாட்டின் வளர்ச்சி இருப்பதை பார்க்கின்றோம். மேலும் பெரிய அளவில் வளர வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...