
சென்னை: கோயில்களில் பணி நியமனம் தொடர்பான அறநிலையத் துறையின் புதிய விதிகள் செல்லும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கான பணி நியமனம் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு புதிய விதிகளை அறநிலையத் துறை கொண்டு வந்தது. அதன்படி, கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுபவர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்து ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்