Wednesday, August 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/03/large/835000.jpgமதுரை | பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கு பின்பு பராமரிக்கப்படாத சாலையால் மண்ணுக்குள் புதையும் வாகனங்கள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்த சாலைகளை புதிதாக போடவோ, சீரமைக்கவோ செய்யாததால் அந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அடிக்கடி வாகனங்கள் மண்ணுக்குள் புதையும் அவலம் நிகழ்ந்து வருகிறது. அதனால், புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையும் சேதமடைந்து மாநகராட்சிக்கு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் புறநகர் வார்டுகளில் ரூ. 274 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் வார்டுகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் சாலைகளை நடுவில் குழி தோண்டி குழாய்கள், பாதாளசாக்கடை தொட்டிகள் அமைத்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...