
சென்னை: கட்டுமானத்திலும் கட்டமைப்பிலும் சிறப்பான முறையில் தனித்துவத்துடன் செயலாற்றி வரும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர் கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விருதுகளை வழங்கவுள்ளது.
பொதுவாகக் கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் பெரும் நிறுவனங்களைச் சார்ந்த ஒன்றாகவே கருதப்படுகின்றன. இருப்பினும், அவை ஏதோ ஒரு பொறியாளரின் கனவில் / திறனில் உருவானவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்தப் பொறியாளர்கள் தங்கள் தனித்துவத்தைக் கட்டுமானத்திலும், கட்டிடத்தின் உறுதியிலும், பேரிடர்களைத் தாங்கிநிற்கும் திறனிலும், புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்னெடுப்புகளிலும் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றனர். அவர்களில்பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல்இருக்கின்றனர். அத்தகைய பொறியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘கட்டிடக்கலை நுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலை நுட்ப விருதுகளை’ ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கவுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்