
புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா - 2022 வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் வினோத்ராஜ்-க்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்துவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுச்சேரியில் 39 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்