
சென்னை: "செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், தமிழகத்தில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்கள், மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். பின்னர் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " ஒரு தடகள வீரர் ஓடும் அளவில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயல்பட்டு வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்திக்காட்டப்பட்டது. அடுத்தப்படியாக டென்னிஸ் போட்டி நடத்த தயாராகிவிட்டீர்கள். அமைச்சர் மெய்யநாதன் ஒரு 'ஸ்போர்ட்ஸ்நாதனாகவே' மாறிவிட்டார். எப்போதும் தனது துறையை துடிப்போடு வைத்திருக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்