Monday, October 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/18/large/884298.jpgதேஜஸ் ரயிலுக்கு டப் கொடுத்த வைகை எக்ஸ்பிரஸ் - 497 கிமீ தூரத்தை 6.34 மணிநேரத்தில் கடந்து சாதனை

மதுரை: தென்னக ரயில்வேயில் மதுரை-சென்னை வைகை விரைவு ரயில்சேவை 15.8.1977 தொடங்கப்பட்டது. மதுரை-சென்னை இடையிலான 497 கி.மீ. தூரத்தை 7 மணி 5 நிமிடத்தில் சென்றடைந்தது சாதனையாக இருந்தது. மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். சென்னையை சென்றடைய வழக்கமாக 7 மணி 20 நிமிடங்கள் ஆகும்.

ஆனால் கடந்த மார்ச் 3-ல் வைகை ரயில் சில தொழில்நுட்பக்கோளாறால் மதுரையிலிருந்து 21 நிமிடம் தாமதமாக புறப்பட்டபோதும், 6 மணி 40 நிமிடங்களில் சென்னையை சென்றடைந்ததில் 44 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது. இப்போது இந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை ரயில் நிலையத்தில் வைகை ரயில் புறப்படுவதில் 30 நிமிடம் தாமதமானது. 30 நிமிடங்கள் தாமதமான போதிலும், ரயிலை இயக்கிய லோகோ பைலட் ஏ.எம்.எம்.ரவிசங்கர் உதவி லோகோ பைலட் கே. முத்துக்குமார் ஆகியோர் ரயிலை வேகமாக இயக்கினர். இதனால் விழுப்புரத்துக்கு வரும்போது 9 நிமிட தாமதமாக குறைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...