Monday, October 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/18/large/884719.jpgஅதிமுகவில் எம்ஜிஆர் கொண்டுவந்த சட்டவிதியை பாதுகாக்கவே போராடுகிறோம் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: எம்ஜிஆர் கொண்டுவந்த அதிமுக சட்ட விதிகளைப் பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில்பங்கேற்றபின், செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும் போது, ‘‘சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது குறித்தும், பங்கேற்பது குறித்தும் சட்டப்பேரவை தலைவர் தகவல் அளித்தார். அதன்அடிப்படையில் அதிமுக சார்பில் எங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக பேரவைக்கு வந்தோம். ஏற்கெனவே பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சட்டப்பேரவை தலைவரை சந்தித்தோம். அலுவல் ஆய்வுக்குழுவில் இயற்றப்படும் தீர்மானத்தை முழுமையாக ஏற்போம்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...