Sunday, October 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/10/large/880789.jpgஎய்ம்ஸ் மருத்துவமனை பணி 2026-க்குள் நிறைவடையும்: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தகவல்

தருமபுரி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தருமபுரியில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

தருமபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த ரூ.58 கோடியையும், கரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1.28 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தேசிய சுகாதாரத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.3,225 கோடி ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் அலுவலர்கள் பார்த்து கொள்ள வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...