Wednesday, October 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/20/large/885332.jpgமேற்கு வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு - தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறவுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று கூறியதாவது: அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உருவாகக் கூடும். இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...