Wednesday, October 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/20/large/885330.jpgஜிஎஸ்டி, வணிக வரி, முத்திரை தீர்வை மூலமாக ரூ.237 கோடிக்கு வருவாய் இழப்பு கண்டுபிடிப்பு - சிஏஜி அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜிஎஸ்டி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் 1,403 இனங்களில் ரூ.237 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக, சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கை, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
2019-20-ம் ஆண்டில் மாநில அரசு ஈட்டிய வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி. இது மொத்த வருவாயில் 69 சதவீதமாக இருந்தது. இதில் ஆண்டு வருவாயின் எஞ்சிய 31 சதவீதம், அதாவது, ரூ.54,176 கோடி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது. மாநில அரசின் மொத்த வருவாய் ரூ.1.75 லட்சம் கோடியாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...