
சென்னை: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி. கனிமொழியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கனிமொழி வாழ்த்துப் பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்