Tuesday, November 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/09/large/894531.jpgபுதிய விமான நிலையம் அமைந்த பிறகு பரந்தூருக்கு மெட்ரோ ரயில் இணைப்பு: சென்னையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, சென்னையில் இருந்து மெட்ரோ ரயில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலாதுறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை அமைச்சர் கிஷன் ரெட்டி 2 நாள் பயணமாக சென்னைக்கு வந்துள்ளார். சென்னை வடபழனி மெட்ரோ ரயில்நிலையத்தில் அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பயணிகளுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பிறகு, வடபழனி முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில்பயணம் செய்த அவர், பயணிகளிடம் உரையாடி, மெட்ரோ ரயில்பயண அனுபவங்களை கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியதாவது: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில், மெட்ரோ ரயில் சேவையை அனைத்து நகரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறோம். பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிவிட்டது. பல நகரங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...