Wednesday, November 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/17/large/898680.jpgதமிழகத்தில் முதல்முறையாக 55 நாட்களாக தொடரும் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் மழைக்கால நோய்களுக்காக தொடர்ந்து 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் 76.08 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகே வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச கொசு வலைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:

மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கொசு வலை வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் முழுவதும் நீர்நிலைகளின் அருகே வசிக்கும் மக்களுக்கு 2.60 லட்சம் கொசுவலைகள் வழங்கும் பணியை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை பகுதியில் மக்களுக்கு கொசு வலைகளை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...