Sunday, November 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/21/large/900852.jpgஉலக கால்பந்து போட்டியையொட்டி 1.50 கோடி முட்டை கத்தாருக்கு ஏற்றுமதி: நாமக்கல் ஏற்றுமதியாளர்கள் தகவல்

நாமக்கல்: கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக முட்டை ஏற்றுமதியாளரும், நாமக்கல் கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணை உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் பி.வி.செந்தில் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன.

இங்கிருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. தற்போது, அங்கு உலக கோப்பை கால்பந்து திருவிழா நடைபெறுவதால், அங்கு உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...