
சென்னை: மயிலாப்பூரில் தரையிலிருந்து 115 அடி ஆழத்தில் 4 நிலைகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. அதாவது, 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையமாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை விரைவில் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்த திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (3-வதுவழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்