Monday, November 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/15/large/897295.jpgமுருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் முகாமில் இருந்து 10 நாளில் விடுவிக்க நடவடிக்கை: திருச்சி ஆட்சியர் தகவல்

திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் இன்னும் 10 நாளில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தங்களை முகாமின் உள்பகுதியில் பிற வெளிநாட்டினருடன் தங்க வைக்க வேண்டும், நடைபயிற்சி செல்ல இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும், தனித்தனி கட்டில் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் நேற்று காலை அறிவித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று 4 பேரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது ஆட்சியர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்கள் காலை உணவைப் பெற்றுக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...