Friday, November 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/05/large/892581.jpgதமிழறிஞர் க.நெடுஞ்செழியன் சென்னையில் காலமானார்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் அன்பில் படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழறிஞர் மற்றும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்(79). தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று, அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பணியாற்றிய அவர், 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்.

அண்மையில் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார். திராவிட இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இந்நிலையில், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுஞ்செழியன், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...