Friday, December 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/17/large/915616.jpgமாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி: மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் 60 அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது முதல்வரிடம் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால் பல விஷயங்களில் பாரபட்சம் நிலவுகிறது. தனி மாநில அந்தஸ்துக்காக, விரைவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...