
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் தந்தை மகன் ஜெயராஜ், பெனிக்ஸ். இவர்கள் கடந்த கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரை சிபிஜ கைது செய்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்