
மதுரை: அலோபதி மருத்துவர்கள் போல் சித்த மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த புகழேந்தி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக சுகாதார துறையின்கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் சித்தா டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அரசாணையின்படி அலோபதி மற்றும் பல் டாக்டர்களைப் போல சித்தா டாக்டர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார். இவரைப்போல மேலும் பலர் இதேகோரிக்கையை வலியுறுத்தி மனுதாக்கல் செய்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்