
திருவள்ளூர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7-ம் தேதி இரவு ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்றது. இது தற்போது தீவிரப் புயலாக முன்னேறி வருகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் இது புயலாக வலுவிழந்து கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்