
கோவை: தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, அன்னூரில் நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்னூர் அருகே தொழிற்பேட்டை அமைக்க 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த திமுக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அவிநாசி-அத்திக்கடவு திட்டம் மூலம் 115 குளம், குட்டைகளுக்கு நீர் கிடைத்து விவசாயத்துக்கு அன்னூர் தயாராகும் வேளையில் அரசாணை பிறப்பித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்