
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் பாஜக-வின் மற்றொரு பிரிவான சக்தி கேந்திரா எனும் பிரிவின் துணைத் தலைவர் பதவி உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500-க்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதத்தில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் கோஷ்டியும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவியின் கோஷ்டியும் முதலில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்